மட்டக்களப்பு தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒருபானை அமைப்பினரால் வழங்கிவைப்பு!











பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட மட்/பட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திற்கு ஒருபானை அமைப்பினரால் போட்டோப் பிரதி இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்விவலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் சிறிதரன் அவர்கள் கலந்துசிறப்பித்ததுடன், ஒருபானை அமைப்பினால் வழங்கப்பட்ட போட்டோ பிரதி இயந்திரத்தினை பாடசாலையின் அதிபரிடம் உத்தியோகபூர்வமாக வலயக்கல்விப் பணிப்பாளரினால் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பலவழிகளிலும் உதவிய திரு.மேவின் ஆசிரியரும் திரு.பிரேம் அசிரியரும் கலந்துகொண்டார்கள்.
 
தொடர்ந்து அங்கு உரையாற்றிய வலயக்கல்விப் பணிப்பாளர் தற்காலத்தில் இவ் உதவியானது கிடைத்தமை ஆச்சரியம் என்றும் தரம் ஐந்து மாணவர்கள் மற்றும் சாதாரணதரமாணவர்களின் பரீட்சைக் காலமுன்னோடிவினாப் பத்திரங்களை பாடசாலையால் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பது
இலகு வாக்கப்பட்டுள்ளது  என்பதுடன் அவர்களின் அடைவுமட்ட  ங்களை அதிகரிப்பதற்கான வாய்பாகவும் அமைந்துள்ளது என்று கூறியதுடன்;
கிழக்கு மாகாணத்தில் ஒருபானை அமைப்பானது மாணவர் நலன் கருதி பலவேலைகளை செய்து வருவதாகவும் அந்தவகையில் ஒருபானை அமைப்பின் அனைத்து அங்கத்தவர்களையும்  வலயக்கவ்விப்பணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்  மேலும் பாடசாலை அதிபரின் முயற்சியையும் பாராட்டி வாழ்த்துக்களையும்
  தெரிவித்தார்.