மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை - கலால் திணைக்களம்

 


இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான உரிமக் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டாலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானசாலைகள் திறக்கப்படும் காலத்தை அவ்வப்போது திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.