களுவாஞ்சிகுடி சிலோன் நேசிங் கல்லூரியில் தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு கிறீன் கார்டன் ஹோட்டல் கல்லடி மட்டக்களப்பில் நடை பெற்றது .

 


 


 








 



 



 



































































ஸ்ரீநி

 களுவாஞ்சிகுடி சிலோன் நேசிங் கல்லூரியில் தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு 2023.11.19ம் திகதி கிறீன் கார்டன்  ஹோட்டல் கல்லடி  மட்டக்களப்பில் நடை பெற்றது .

 இதன் போது  அதிதிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு ஒருநிமிட இறை  வணக்கத்துடன்  தேசியக் கீதம் இசைக்கப்பட்டு அதிதிகளின்  மங்கள விளக்கேற்றலுடன், சிலோன் நேர்சிங் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெ. மியூறியா டிலாணி   அவர்களின் தலைமையில்   நிகழ்வு ஆரம்பமானது.

 சிலோன் நேசிங் கல்லூரியில் ஒரு வருட கால தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த 100 தாதிய உதவியாளர்களுக்கு தொப்பி அணிவிக்கப்பட்டு  பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இதன்போது பதக்கம் அணிவிக்கப்பட்டு, நினைவுச் சின்னமும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதியாக
சுகாதார அமைச்சின் (திட்டமிடல்) பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி எஸ்.ஸ்ரீதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக மக்கள் ஜனநாயக காங்கிரசின் தலைவரும் முன்னால் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி கே.மோகனகுமார், கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன்,
சிலோன் நேர்சிங் கல்லூரியின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் எஸ்.கந்தசாமி, கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.அதிசயராஜ்,  மக்கள் வங்கியின் முகாமையாளர் ஈ.ஜீ.பிரகாஸ், எந்திரி ஏ.தம்பிமுத்து, கல்லூரியின் அதிபர் எம்.கே.சிவசிதம்பரம், தாதிய உத்தியோகத்த உயர் அதிகாரிகள் மற்றும் கௌரவிக்கப்பட்ட  பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்