வன்னியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், உடல் நலக்குறைவு காரணமாக இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாத ஐந்து வயதுக் சிறுவனை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை மறுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனது மகனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் வாய்ப்பை மறுத்த, ஆசிரியர்கள் புலமைப்பரிசில் பரீட்சை முக்கியமில்லை என கூறியதாக சிறுவனின் தாய் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் நவம்பர் 8ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு, கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனே பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பை இழந்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.