பரத நாட்டியம் பற்றித் தவறான கருத்தை வெளியிட்ட மௌலவிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டு சுவாமி விபுலானந்தா அழகியல் மாணவிகள் ஆர்ப்பாட்டம்! (கல்லடி செய்தியாளர்) தமிழ்க் கலாசாரம் பற்றியும், பரத நாட்டியம் பற்றியும் தவறான கருத்தினை வெளியிட்ட மௌலவிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று புதன்கிழமை (15) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கற்கைகள் நிறுவகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் குறித்த மௌலவி சமூக ஊடகமொன்றில் பரதம் பரதினில் ஆடும் நடனம் எனத் தெரிவித்திருக்கிறார். இது உண்மையில் தெய்வீகத் தன்மை வாய்ந்தது. இந்நிலையில் தவறான கருத்தினை வெளியிட்ட குறித்த மௌலவி அக்கருத்தை வாபஸ் பெற்று, மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல் அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மாணவர்கள் தமது கருத்தினைப் பதிவு செய்தனர்.