மாவீரத் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது கோழைத்தனம்- சரத் வீரசேகர

 


உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை அழித்துள்ளோம். இலங்கையிலிருந்து  புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் இன்றும்  துடிப்புடன் உள்ளார்கள், செயற்படுகிறார்கள்.

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளார்களா? என்பதை ஆராய வேண்டும். மாவீரத் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது  கோழைத்தனம் என  தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர  தெரிவித்தார்.