ஹமாஸ் அமைப்பினர் சுரங்கம் அமைத்து பதுங்கியுள்ள நிலையில், பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து கூறி வந்த நிலையில், காசாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையின் அடித்தளத்தில் சுரங்கபாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்ததற்கான ஆதாரமாக 6 நிமிட காணொளி ஒன்றை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பாலஸ்தீன அரசு, மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகள், ஹமாஸ் போன்றவை குறித்த குற்றச்சாட்டை மறுத்தன.
குறித்த காணொளியில் தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் ஒரு சுரங்கபாதையின் வழியை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து, அந்த சுரங்கத்தின் வழியே உள்ளே செல்கிறார். இந்த சுரங்கத்தின் மறுபக்க வழி ரன்டிசி மருத்துவமனையில் திறக்கப்படுகிறது என அவர் விளக்குகிறார்.