ஆறு மாதக் குழந்தையொன்று பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளது.

 


மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒளிக்குளம், பட்டிமாபுரம்  பிரதேசத்தில்  (24) அதிகாலை ஆறு மாதக் குழந்தையொன்று பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளது.

பாத்திமாபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டின் தரையில் உறங்கிக் கொண்டிருந்த சிசுவை பாம்பு தீண்டியுள்ளமை மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனையில்  தெரியவந்துள்ளது.

அதிகாலை 3.30 மணியளவில் தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பாம்பு தீண்டியுள்ளதுடன், காலை 7 மணியளவில் குழந்தை மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் குழந்தை உயிரிழந்திருந்தமை தெரியவந்ததையடுத்து, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இக்னேஷ் அபிலாஷ் என்ற 6 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.