இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கே தனது கவனத்தை செலுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு .

 

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதே தனது கவனத்தை செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தாம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொருளாதாரம் தொடர்பில் உண்மையைப் பேசியதால் தோற்கடிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.