நான்காவது ஆண்டில் கால்பதிக்கும் "Batti media" வுக்கு இனிய வாழ்த்துக்கள்! -தென்றல் ஆசிரியர் தெரிவிப்பு!



க.கிருபாகரன்-தென்றல் ஆசிரியர்

இன்றைய நாளில் ஞாயிற்றுக்கிழமை (19) நான்காவது அகவையில் கால் பதிக்கும் "Batti media" இணையச் செய்திச் சேவை இன்னும் பல ஆண்டுகள் தமிழர் பிரதேச செய்திகளை வெளிக் கொணரும் வகையில் செயற்பட எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திப்பதாக மட்டக்களப்பு கல்லடியிலிருந்து வெளிவரும் "தென்றல் சஞ்சிகை" ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

"Batti media" இணையச் செய்திச்சேவை" நான்காவது அகவையில் கால்பதிக்கும் உன்னத நிலையினை வாழ்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

ஊடகமொன்றை தற்கால போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில்  வெற்றிகரமாக நடத்திச் செல்வதென்பது சாதாரண விடயமல்ல. இந்நிலையில் இவ்விணையச் சேவையின் ஸ்தாபகர் எம்.சிவகுமார் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

அவர் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே இதனை நடாத்தி வருவது கண்கூடு.

எனவே எத்தடை வரினும் தான் எடுத்த கருமத்தை சிறப்பாக செய்ய எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்பாலித்திட வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.