இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள்,குழந்ததைகள் உட்பட 80 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் 200ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 



வடக்கு காசாவில்  (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள்,குழந்ததைகள் உட்பட 80 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் 200ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு காசா பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு காசா பிராந்தியத்தில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையை இஸ்ரேல் படையினர் தொடர்ந்து முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.