2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சில தினங்களுக்குள் வெளியிடப்பட உள்ளது

 


 

 023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சில தினங்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளுக்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியுள்ளார்.