நுவரெலியாவில் -200 மலையகம்-

 


மலையகத்தமிழர்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்வை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 24ம் திகதி நுவரெலியாவில் கொண்டாட தீர்மாணித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் மலையகத் தமிழர்கள் மலையகத்துக்கு வருகைத்தந்து 200 வருடங்கள் கடந்துவிட்டன. அந்த 200வருடத்தில் மலையகம் அடைந்துள்ள அபிவிருத்தி, மலையகத்தில் உருவாகியுள்ள சாதனையாளர்கள்,  உட்பட மலையகத்துக்காக பாடுபட்டவர்கள் என ஒவ்வொரு துறைசார்ந்தும் கௌரவிக்கப்பட உள்ளனர் என்றார். 

200 வருடத்தில் மலையகம் எத்தனை எத்தனை சாதனைகளை படைத்துள்ளது. எத்தனை சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது எற்பதை எதிர்வரும் டிசெம்பர் 24ம் திகதி நுவரெலியாவில் பார்க்க முடியும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.