மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம் பெறும்

 


முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

அகழ்வுப்பணி தொடர்பாக நேற்று தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.