(கல்லடி செய்தியாளர்)
ஈழத்தமிழ் இலக்கிய உலகு இன்னும் ஒரு படைப்பாளியை இழந்து நிற்கின்றது. அவர் விட்டுச் சென்றுள்ள பணியைப் பொறுப்பேற்று தொட்டுத் துலங்க வைப்பதே அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் செய்யும் பிரார்த்தனையாகும் என சிரேஷ்ட. எழுத்தாளரான "வீசுதென்றல்" ஆ.மு.சி. வேலழகனின் மறைவு குறித்து மட்டக்களப்பு கல்லடியிலிருந்து வெளிவரும் "தென்றல் சஞ்சிகை" ஆசிரியர் க.கிருபாகரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
ஆ.மு.சி. என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அமரர் பன்முக ஆளுமை கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர். சினமறியா புன்சிரிப்பாளர்.
புத்தக வெளியீடு என்றால் போதும் என்று ஒதுங்கிக் கொள்ளும் காலகட்டத்தில் அவர் தனியொருவராக நின்று இதுவரை 45 நூல்களை வையகமதில் தவழ விட்டுள்ளார்.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற உயரிய சிந்தனைக்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள பல எழுத்தாளர்களை உன்னத நிலைக்கு ஆக்கி விட்ட பெருமைக்குரியவர். அந்த நல்ல உள்ளம் இன்று நம்மிடையேயில்லை.
இந்நிலையில் அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக! எனவும் அவ் இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)




