மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உருகாமம்
கிராமத்தில் குடியிருப்புக்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் பல்வேறு
சேதங்களை
விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உருகாமத்தில்,
யானைகள் காணிகளுக்குள் புகுந்து அங்குள்ள வாழை மரத்தோட்டத்தை நாசம்
செய்ததோடு, யானைகள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுக்கும்
வகையில் அமைக்கப்பட்டிருந்த, மின்சார வேலிகளையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன.
யானைகளின் அச்சம் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பயன்தரு
மரங்களும் வாழ்வாதார பயிர்களும் அழிக்கப்படுவதன் காரணமாக பொருளாதார
ரீதியில் நெருக்கடிகளை தாம் எதிர்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.





