ஸ்திரத்தன்மையை அடைவதற்கான பயணத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பலியிடக் கூடாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டங்கள் மூலமாகவோ, கலை வெளிப்பாடுகள் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு மஹரகம இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வு நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.





