.
புலம்பெயர்ந்து வாழும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் கிழக்கில்
முதலீடுகளை செய்து மாகாணத்தினை ஏனைய மாகாணங்களைப்போன்று வளப்படுத்துவதற்கு
முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிழக்கில் அதிகளவான
வளர்ச்சிப்பணியை முன்னெடுக்குமாறு தனக்கு அறிவுறுத்தல்களை
வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நேற்று மாலை
கல்லாறு சதீஸின் ‘பனியும் தண்டனையும்’நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னிந்தியாவின் திரைப்பட தயாரிப்பாளரும் பதிப்பாளருமான
மு.வேடியப்பன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் நூலகர் கௌரவிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானும் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வின்போது கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.