நிலவும் வறட்சி இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் .

 

நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான நீர் நிலைகளில் 50 வீதம் நீர் குறைவடைந்துள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் ​கோரிக்கை விடுத்துள்ளது.

நிலவும் வறட்சி இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தேவையற்ற விடயங்களுக்கு நீரை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வரட்சியுடான காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் – பண்டுவஸ்நுவரவிலுள்ள கொலமுனு ஓயா தற்போது முற்றாக வற்றியுள்ளமையினால், பண்டுவஸ்நுவர, பண்டார கொஸ்வத்தை பகுதிகளுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் பௌசர்களின் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.