திருகோணமலை மாவட்ட வெருகல் கட்டையாறு பால புனரமைப்பு வேலைகள் முன்னெடுப்பு

 

 


 திருகோணமலை மாவட்டத்தின்  வெருகல் பிரதேச செயலக பிரிவில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் கட்டையாறு பாலத்திற்கான களவிஜயத்தினை இராஜங்க அமைச்சர்.சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முன்னெடுத்திருந்தார்.

 குறித்த பாலமானது விவசாயிகள் பயன்படுத்தும் அத்தியாவசியமான பாலமாக கருதப்பட்ட போதிலும் மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில் அக் கிராம மக்களும் விவசாய அமைப்புக்களும் இராஜங்க அமைச்சரிடம்  முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக  இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சுமார்  50 மில்லியன் ரூபாய்  செலவில் கடந்த மே மாதம் அளவில் குறித்த பாலத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

 

 மேற்படி பாலம் முழுமையடையும் பட்சத்தில் அதனை சூழவுள்ள சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் அதனூடாக பயணம் செய்யும் பொதுமக்கள் என அனைவரும் நன்மையடைய உள்ளனர்.

இவ்விஜயத்தின் போது பாலத்தின் கட்டுமாணப் பணிகள் தொடர்பாக இராஜங்க அமைச்சர் பொறியியலாளரிடம் விபரங்களை கேட்டறிந்தார்.