பொத்துவில் அறுகம்பை கடலில் கடல் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேர்மனி வீரர் ஒருவரின் அப்பிள் ரக கையடக்க தொலைபேசி மற்றும் பணத்தை திருடிய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறுகம்பை கடலில் கடல் சறுக்கல் பயிற்சில் ஈடுபடடுவதற்கா கடற் கரையில் கடந்த சனிக்கிழமை (08)சென்றிருந்து ஜேர்மனிய நாட்டு வீராரின் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான அப்பிள் ரக கையடக்க தொலைபேசி மற்றும் ஆயிரத்து நூறு ரூபாய் பணம் திருட்டுப் போயுள்ளதையடுத்து பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு அட்டாளச்சேனை பாலமுனையைச் சேர்ந்த 22 ,32 வயதுடைய இளைஞர்களை இருவரை அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்ததுடன் திருடப்பட்ட கையடக்க தொலைபேசி மற்றும் பணத்தை பொலிஸார் மீட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை புதன்கிழமை(12) பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இருவரும் குற்றத்தை ஓப்புக் கொண்ட நிலையில் இருவரது கைவிரல் அடையாளங்களை பெறுமாறும் எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.