மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலய சுவாமி விவேகானந்தா கலாச்சார மத்திய நிலையமும் இணைந்து , கல்லடி உப்போடை விபுலானந்தர் நினைவு மண்டபத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னெடுத்திருந்தது .
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
நீலமாதவானந்தா, உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் திரு M,செல்வராஜா,மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் S. சுதாகரன் ,ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர் .மேலும் யோகா பயிற்றுவிப்பாளர் ஸ்ரீ சிவலிங்கம் ஸ்ரீதரன் மற்றும் , ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்களின் பங்குபற்றலில் நிகழ்வு வெகு சிறப்பாக நடந்தேறியது .