ஆறு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

 


அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பிரான்ஸ் விஜயத்தின் பின்னர் அமைச்சரவை மாற்றத்துடன் ஆறு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

 முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ். எம். சந்திரசேன, சி. பி. ரத்நாயக்க மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

 அதிபரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்னர், சிறி லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக அமைச்சுப் பதவிகளை வழங்குவது பொருத்தமற்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச மேற்கொண்ட முயற்சியின் பயனாக இவர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.