கண்டியில் இருந்து அம்பிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில் பெண்ணொருவரின் தங்க நகையை அபகரித்த மூன்று இளம்பெண்கள் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்தில் பெண்ணொருவர் கழுத்தில் தங்க நகை இல்லாததை உணர்ந்து நடத்துனர் மற்றும் சாரதியிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகளுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பேருந்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்காமல் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பஸ்ஸில் சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்ட போது அங்கு வந்த கண்டி தலைமையக பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் யுவதி ஒருவர் மறைத்து வைத்திருந்த தங்க நகையை கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், பேருந்தில் இருந்த 18-22 வயதுடைய மூன்று யுவதிகளை கைது செய்து விசாரணை நடத்தினர்.
குறித்த நகையை திருடும் போது மற்றைய இரு பெண்களும், குடை மற்றும் கைப்பைகளால் அதை மறைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் புத்தளம், திருகோணமலை மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களைப் பற்றிய தகவல் அறிக்கை நாட்டில் உள்ள அனைத்துப் பொலிஸாரிடமிருந்தும் கோரப்பட்டுள்ளது.