அண்மையில் சுகாதார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட 100-க்கு மேற்பட்ட வைத்தியர்கள் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன .
புதிய வைத்தியர்கள் குறைந்த வருமானத்தில் பணியாற்ற தயாரில்லை என தெரிவிக்கப்படுகிறது . பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் காரணம் சம்பள பற்றாக்குறையே என்று சொல்லப்படுகிறது .
இப்படியான சூழ்நிலை தொடரும் என்றால் இலங்கை சுகாதார துறை பின்னடைவை சந்திக்க நேரும் என்றும் , நோயாளிகளும் சிரமங்களுக்கு உள்ளாகலாம் என்றும் மூத்த வைத்திய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர் .