வெசாக்கை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!


வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெசாக் போயாவை முன்னிட்டு பல வெசாக் வலயங்கள், பல்வேறு சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் கொழும்பில் பாரிய பொலிஸ் பிரசன்னத்தை எதிர்பார்க்கலாம் எனவும் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நேரில் சோதனை செய்வதற்கும் மேலதிக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெசாக் விடுமுறை காலம் முழுவதும் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவிலியன்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.