உகலபுகழ் இந்திய ஓவியக் கலைஞர் பத்மவாசன் அவர்கள் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம்.

 


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உகலபுகழ் இந்திய ஓவியக் கலைஞர் பத்மவாசன் அவர்கள் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்து ஓவியக் கலையின் ஊடாக இறைவனைக் காணலாம் என்னும் தொனிப் பொருளில் அறநெறிப் பாடசாலை மாணர்களுக்கு ஓவியக் கலை பயிற்சி வகுப்புக்களை நடாத்திருந்தார்.

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சதிசேகரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்று இருந்தன.

திருக்கோவில் பிரதேசத்திற்கு ஆன்மீக விஜயத்தினை மேற்கொண்டு இருந்த உலக புகழ் ஓவியக் கலைஞர் பத்தவாசன் அவர்களுக்கு திருக்கோவில் பிரதேச அறநெறிப் பாடசாலைகள் மற்றும் கலை மன்றங்களினால் மகத்தான வரவேற்று வழங்கப்பட்டு இருந்ததோடு அவரது ஓவியக் கலையின் ஊடாக முன்னெடுத்து வரும் இறை சேவையை பாராட்டி பொன்னாடைகள் போர்த்தி கௌரவித்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நாவலர் பெருமானின் 200ஆவது நினைவு தின வழிபாடுகளுடன் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு ஓவியங்கள் வரையும் நுட்பங்களை கற்றுக் கொள்ளும் பயிற்சிகள் வழங்கப்பட்டு இருந்தன. அத்தோடு திருக்கோவில் 04 கிராம சேவையாளர் பிரிவில் காயத்திரிகிராமத்தில் திருக்கோவில் பிரதேசசபையின் தவிசாளரின் தலைமையில் நாவலர் பெருமானின் 200 ஆண்டு நிறைவினை நினைவு கூறும் வகையில் நாவலர் வீதி எனும் பெயர் பலகையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து கிழக்கிலங்கை வரலாற்று சிறப்பு மிக்க புராதண திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சவாமி ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு இருந்ததுடன் ஆலயத்தின் கருவறையில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமானின் திருவுருவச் சிலையினை வரையும் முகமாக மூல மூர்த்தினையும் பார்வையிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அம்பாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீன குரு பீடத்திற்கும் சென்று வழிபாடுகளை முன்னெடுத்து இருந்ததுடன் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள முன்மாதிரியான திருஞானவாணி அறநெறிப் பாடசாலைக்கும் விஜயம் செய்து பார்வையிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் உலக புகழ் இந்திய ஓவியக் கலைஞர் பத்மவாசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இருந்ததுடன் நிகழ்வுகளில் திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் சதிசேகரன் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் கமலராஜன் மாவட்ட இந்துசமய கலாசார உத்தியோகத்தர்
ஜெயராஜ், திருக்கோவில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் நிஷாந்தி தேவராஜ் மதனசீலன் திருக்கோவில் முருகன் ஆலய வண்ணக்கர் ஜயந்தன் குருகுலப் பணிப்பாளர் இராஜரெத்தினம் திருஞானவானி முத்தமிழ் இசைமன்ற தலைவர் கணேசமூர்த்தி திருக்கோவில் ஏ.எஸ்.கே. திருவதிகை கலைக்கூடத்தில் தலைவர் கார்த்திகேசு உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சகாதேவராஜா அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.