SHIVA MURUGAN
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆரையம்பதி H&D-தாதியர் பாடசாலை ஏற்பாட்டில் 2022.11.21-ம் திகதி அன்று திங்கட்கிழமை காலை 8.00- மணி முதல் 2.00- மணி வரை ஆரையம்பதி H&D-தாதியர் பாடசாலையில் இரத்த தான முகாம் நடை பெற்றது .
இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் கீத்திகா மதனழகன் ,இரத்த வங்கி பிரிவு பொறுப்பதிகாரி டி .ஜெயராஜ் , பொதுசுகாதார பரிசோதகர் பி.எம்.எம்.பைசல் , பொதுசுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் ஆர் அனுபிரதாப்,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், எச்.என்ட.டி தாதிய பாடசாலை மாணவர்கள் ,இளைஞர் ,யுவதிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இரத்த கொடையாளிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.














































