தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சேவை தற்போது 11 மாவட்டங்களில் நிகழ்நிலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
மாதத்திற்குள் அவற்றை பெற முடியும் என்றும் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ. 184 மில்லியன் செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டு ரூ. 28 மில்லியன் செலவில் புதிய நிறுவனம் மூலம் சேவையைப் பெறவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மூலம் அச்சிடும் இயந்திரங்களை வாங்கவும், அச்சிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




