நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என அதிபர் முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அதிபர் செயலகத்தின் வடக்கு அபிவிருத்தி விசேட பிரிவு அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிபர் வடக்கு, கிழக்குக்கான இந்தச் செயலணியை திறந்து வைப்பதற்காக வருகைதந்தமைக்காக வடக்கில் இருந்து அவரை நாம் வரவேற்கின்றோம்.





