கஞ்சாவை வளர்ப்பதற்கு முன்மொழிவு- இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மகிழ்ச்சி

 


இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக    தெரிவித்துள்ளார்.

மருத்துவ மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி உணர்ந்திருப்பது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பல வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் என்பதால், தான் அதை விளம்பரப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சா செய்கை மூலம் இரண்டு பில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான முதலீடுகளை அடுத்த வருடம் கொண்டு வருவதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.