இன்று லயன்ஸ் கழக ஏற்பாட்டில் நீரிழிவை ஒழிப்போம் , நலமுடன் வாழ்வோம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடை பவனி ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது .





















நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் லயன்ஸ் கழகங்களுடன் பாடசாலை லியோ கழகங்கள் இனைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தும் வகையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடைபவனி மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் இருந்து பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா வரை இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி சிறிகாந்த் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பொலிஸ் அதிகாரி பி.கே கெட்டி ஆராச்சி உட்பட பொலிஸ் அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் மாணவர்கள். வைத்திய அதிகாரிகள் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இதன்போது நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு கையோடும் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது