இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் .

 



இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விசேட நிகழ்வு கூட்டுத்தாபன தமிழ் சேவை பணிப்பாளர் ஆர். கணபதிப்பிள்ளை தலைமையில் கூட்டுத்தாபனத்தின் முன்றலில் (16) வெகு சிறப்பாக நடைபெற்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் பேராசிரியர் உதித்த கயாசான் குணசேகர இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் சுதத் ரத்னவீர, பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிர்வாகம் தாரகா மேதாவி திஸாநாயக்க, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பொறியியலாளர் சண் குகவரதன், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அனிருத்தனன், கலாநிதி யூசுப் மரைக்கார், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சேவை சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தைப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகளை டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு பிரம்ம ஸ்ரீ உதயகுமார சர்மா நடாத்தினார்.