கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் நடை பெற்றது

 


கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் எ.பிரியகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

புதிய நிர்வாக தெரிவின் போது சங்கத்தின் தலைவராக மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எ.பிரியகாந்தன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஜி.பி நிரஞ்சன் தெரிவு செய்யப்பட்டார்
உப தலைவராக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த வா.ச.ஜெகநாதன் தெரிவு செய்யப்பட்டார் உதவி செயலாளர் பி.பிரமிதன், பொருளாளர் க. சண்முகநாதன், நிர்வாக செயலாளர் இ.நாகலிங்கம், பிரச்சார செயலாளர் .அ. ரமணன்,
உதவி பொருளாளர் ம. மகேந்திரராசா மேலும் உறுப்பினர்களாக,
சி. வசீதரன், தி.கிருபாகரன், எ.பி பேணாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், நம்பிக்கை பொறுப்பாளர்களாக க.சற்குருலிங்கம், சி.திருநாவுக்கரசு, எஸ் கிருபாகரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்தோடு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட கிளையின் செயலாளர்களாக
தி.கிருபாகரன் ,எ.பி பேணாட் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.