உதயம் விழிப்புலனற்றோர் சங்க விளையாட்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு மட்டக்களப்பு நொச்சிமுனை நடைபெற்றது.


 

இந்தியாவில்  நடைபெற்றவுள்ள உலக கிண்ண கிரிகெட் போட்டியில் பங்குபற்றவுள்ள உதயம் விழிப்புலனற்றோர் சங்க விளையாட்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு மட்டக்களப்பு நொச்சிமுனை நடைபெற்றது.

தேசிய ரீதியில் நடைபெற்ற விழிப்புலனற்றோர் விளையாட்டு வீரர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றி விழிப்புலனற்றோர் தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்க விளையாட்டு வீரர்களை பாராட்டி கௌரவித்ததோடு இந்தியாவில் 12 நாடுகளுக்கிடையில் நடைபெறவுள்ள பார்வையற்றோர் உலக்ககின்ன கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் விளையாடவுள்ள உதயம் விழிப்புலனற்றோர் சங்க விளையாட்டு வீரர்களை வாழ்த்தி வழியளிப்பும் நிகழ்வு உதயம் விழிப்புலனற்றோர் சங்க தலைவர் எம் ஜதீஸ் தலைமையில் நடைபெற்றது.

பார்வையற்றோர் உலக்ககின்ன கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா செல்லவுள்ள வீரர்களை பாராட்டி அவர்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் , இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் , தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் கே.ஜீவராசா,மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, அபிவிருத்திஉத்தியோகத்தரும் ,உதயம் விழிப்புலனற்றோர் சங்க ஆலோசகருமான விநாயகமூர்த்தி ,சிவானந்த விளையாட்டு கழக தலைவர் முரளி உட்பட உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .