(கனகராசா சரவணன்)
மட்டக்களபபு
நகர்பகுதில் பூட்டிய வீடு ஒன்றை உடைத்து தொலைக்காட்சி பெட்டி, காஸ்
சிலிண்டர், பூபர் செற் மற்றும் 27 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச்சென்ற
முன்னாள் பிரேத பெட்டி விற்பனை கடை ஒன்றின் உரிமையாளர் மற்றும் திருட்டு
பொருளை வாங்கி கொடுத்த புரோக்கர் ஆகிய இருவரையும் 14 நாட்கள்
விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்
நேற்று சனிக்கிழமை (12) உத்தரவிட்டார்.
நகர்
பகுதியிலுள்ள வெலியஸ் அவனியூர் வீதியில் உள்ள வீடு ஒன்றை அதன் உரிமையாளர்
கடந்த மாதம் 25 ம் திகதி பூட்டிவிட்டு குடும்பமாக வெளியூருக்கு சென்று
கடந்த 7ம் திகதி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின்கதவை உடைத்து
அங்கிருந்த எல்.டி.டி 32 இஞ்சி தொலைக்காட்சிபெட்டீ ஒன்று, காஸ்சிலிண்டர்
ஒன்று, பூபர் செற் ஒன்று, 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி
கேற்போன் மற்றும் 27 ஆயிரம் ரூபா பணம் திருட்டுப்போயுள்ளது
இதனையடுத்து
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மட்ட தலைமையக பொலிஸ் நிலைய
பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட
விசாரணையினையடுத்து திருட்டு கும்பலின் பிரதான சூத்திரதாரியான முன்னாள்
பிரேத பெட்டி விற்பனை கடை ஒன்றின் உரிமையாளர் மற்றும் தொலைக்காட்சி
பெட்டியை வாங்கி கொடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த புரோக்கர் ஆகிய இருவரை
கைது செய்ததுடன் திருடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி, காஸ் சிலிண்டர்களை
மீட்டனர்ஃ
இதில் கைது செய்யப்பட்டவர்களை
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று
சனிக்கிழமை (12) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை இதில் கைது
செய்யப்பட்ட முன்னாள் பிரேத பெட்டி விற்பனை கடை ஒன்றின் உரிமையாளர் பல
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற
பிணையில் வெளிவந்தவர் எனவும் ஆயும் ஒன்று கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக
உயர் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.





