அரசு ஊழியர்களின் சம்பளம் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு பட்டியலில் குறைக்கப்படுகிறதா ?

 


அரசாங்க ஊழியர்களின் சம்பள பணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முக்கிய அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக 420 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், அடுத்த வருடம் அது 380 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப அரசு ஊழியர்களின் சம்பளம் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு பட்டியலில் குறைக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.