இரண்டாம் மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.


 

தேசிய சமாதான பேரவையினால் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது

மத நல்லிணக்கத்தின் ஊடாக சமாதானத்தினை கட்டியெழுப்பும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் சமய சமூகம் சார்ந்த மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வரும் வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா தேசிய சமாதான பேரவையுடன் இணைந்து நல்லிணக்கத்திற்கான மொழி எனும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு தொடர்பாடல்களை ஏற்படுத்தும் வகையில் 90 மணித்தியாலங்கள் கொண்ட இரண்டாம் மொழி கற்கை நெறியினை
பூர்த்தி செய்த சமாதான பேரவையின் உறுப்பினர்களின் கலைகலாசார நிகழ்வுகளும் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு நொச்சிமுனையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது

வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்கா உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்காவின் இயக்குனர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமாதான பேரவையின் தேசிய நிறைவேற்று இயக்குனர் ஜெகான் பெரேரா , கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும் தேசிய சமாதான பேரவையின் பொருளாருமான
டி.ஜெயசிங்கம்,இரண்டாம் மொழி திட்ட முகாமையாளர் விஜகாந்த் ,தேசிய கல்வியல் கல்லூரி விரிவுரையாளரும் இரண்டாம் மொழி கல்வி வளவாளருமான எஸ்.ஜெயராஜ் ,தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு திட்ட அலுவலர்களான அரபாத் மற்றும் நாணயகார மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜாஹிதா ஜலால்தீன் , மத தலைவர்கள் இளைஞர் யுவதிகள் ,வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்கா உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்