அறநெறி பாடசாலைகள்,அதிபர்கள்,மாணவர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா மட்டக்களப்பில் நடைபெற்றது.

 


புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் அறநெறி பாடசாலைகள்,அதிபர்கள்,மாணவர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா மட்டக்களப்பில் நடைபெற்றது.

புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சும் இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்த இந்த நிகழ்வு மட்டக்களப்பு,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் நடைபெற்றது.

இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் திருமதி கி. ஹேமலோஜினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ்,மட்டக்களப்பு காயத்திரிபீடம் கலாபூசணம் சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் ஆகியோர் கலந்துகொண்டதுடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி பாரதி கெனடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அறநெறி பாடசாலை மாணவர்களின் திறமையினை வெளிக்கொணரும் வகையில் தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அறநெறி மாணவர்களுக்கு தேசிய ஆக்கத்திறன் விருதும்,இந்து சமய அறநெறிப்பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விரும் வழங்கப்பட்டன.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 80 அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும் 29ஆசிரியர்களும் 22அறநெறிப்பாடசாலைகளுக்கும் இதன்போது தேசிய ஆக்கத்திறன் விருதும், தேசிய மேன்மை விருதும் வழங்கப்பட்டன.