தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு.

 


இந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எருவில் பிரதேசத்தினைச் சேர்ந்த அ.மகேஸ்வரன் அவர்களின் நிதி உதவி மூலம் இன்று நடைபெற்றது.

இச் செயலமர்வானது எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றதுடன் அப்பாடசாலையின் அதிபர் சி.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் தமிழரசுக் கட்சியின் எருவில் வட்டாரத்தின் பிரதித் தலைவர் அ.வசிகரன், அமைப்பின் ஆலோசகர் தாஸன், பொருளாளர் ஆசிரியருமான பொ.புஸ்பநாதன் பிரதித் தலைவர் ஆசிரியருமான த.தர்மசீலன் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
வளவாளர்களாக கி.கலேஜன் எஸ் .அருள்குமார் ஆகியோர் செயற்பட்மை குறிப்பிடத்தக்கது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்களின் திறனை விருத்திசெய்யும் வகையிலான தொடர்ச்சியான பணியை எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியம் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.