பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் மருத்துவமனையில் சேரக்கப்பட்டனர்.

 


மாத்தளையின் பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை திடீர் சுகயீனமுற்று மாவட்ட மருத்துவமனையில் சேரக்கப்பட்டனர்.
இவ்வாறு மருத்துமனையில் சேர்க்கப்பட்ட மாணவிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வென்னப்புவ பிரதேசத்தில் நடைபெற்ற வலைபந்தாட்டப் புாட்டியில் பங்கேற்றவர்கள் என்று கூறப்படுகின்றது.
இந்த மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டன என்று மருத்துவமனை தரப்புகள் தெரிவித்தன.