மட்டக்களப்பு காத்தான்குடியில். இரும்பு மின் உபகரணங்கள் மற்றும் பெயிண்ட் விற்பனை செய்யும் வர்த்தக நிலைய களஞ்சியசாலை ஒன்றில் அதிகாலை காலை ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அந்த களஞ்சியசாலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது
காத்தான்குடி முதலாம் குறிச்சி இப்ராஹிம் மன்சில் வீதியிலுள்ள இக் களஞ்சியசாலையே எரிந்து சேதமடைந்துள்ளது
அதிகாலை 2.30 மணியளவில் இந்த களஞ்சியசாலையில் தீப்பவியுள்ளதுடன் இதன் போது பொது மக்கள் அயலவர்கள் தீ பரவுவதை அணைத்துள்ளனர்.
இதையடுத்து மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் அதன் வாகனத்துடன் விரைந்து தீயை அணைத்துள்ளதுடன் தீ பரவுவதை கட்டுப்பாட்டுககு கொண்டுவந்தனர்.
இந்த தீப்பரவல் காரணமாக களஞ்சிய சாலையில் இருந்த பெயிண்ட் வகைகள் மற்றும் மின்சார உபகரணங்கள் என பல பொருட்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
ஸ்தளத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலீஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி ரஹீம் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் சேதவிபரங்களையும் பார்வையிட்டார்
இந்த களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சுமார் 40 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலீஸ் நிலையத்தில் அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்
இந்த தீ பரவலுக்கு மின்னொழுக்கு காரணமாக இருக்கலாம் என காத்தான்குடி பொலீசார் சந்தேகிக்கின்றனர்
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக காத்தான்குடி பொலீசார் மேலும் தெரிவித்தனர்





