(கனகராசா சரவணன்)
மட்;டக்களப்பு
பாசிக்குடாவில் ஹோட்டல் ஒன்றின் பகுதியில் வைத்து போதை பொருள்
வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காத்தான்குடி மற்றும் மன்னாரைச்
சேர்ந்த 3 பேரை நேற்று வியாழக்கிழமை (17) மாலை 22 கிராம் ஜஸ் போதைப்
பொருளுடன் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் பொலிசார் இணைந்து கைது
செய்துள்ளதாகவும் கர் ஒன்றை மீட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
காகித
ஆலை இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து
சம்பவதினமான நேற்று மாலை 5.30 மணியளவில் குறித்த ஹோட்டல் பகுதியை கல்குடா
பொலிசாருடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து சுற்றிவளைத்து போது அங்கு
வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பேரை 22 கிராம் ஜஸ் போதைகப்
பொருளுடன் கைது செய்தனர்
இதில் காத்தான்குடியை சேர்ந்த 33 .36
வயதுடைய இருவரும் மன்னாரைச் சேர்ந்த ஒருவருமாக 3 பேர் எனவும் இவர்கள் இந்த
போதை பொருள் வியாபாரத்திற்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் மீட்டுள்ளதாகவும்
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
பொலிசார் தெரிவித்தனர்.






