மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று நடைபெற்றது.

 


மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி,கல்வி அபிவிருத்திக்கான முழுநாள் செயலமர்வு நேற்று கல்லூரியின் அதிபர் இராசதுரை பாஸ்கர் தலைமையில்
கல்லூரியின் காத்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்ச்சி செயலமர்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் (திட்டமிடல்)திருமதி.கரணியா சுபாகரன்,பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளர் எந்திரி வை.கோபிநாத், வளவாளர்களாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் தொழில் வழிகாட்டல் உளவளத்துணை ஆலோசகர் அழகையா ஜெகநாதன்,இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்
கே. ஞானரெத்தினம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.

மாணவர்களின் நேர்மனப்பாங்கை விருத்தி செய்வதற்கான ஆசிரியர்களின் பங்களிப்பு எவ்வாறு? ,வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் நவீன கற்றல்,கற்பித்தல் சாதனங்களின் பயன்பாடும் ஆசிரியர்களின் பங்களிப்பு,கற்பித்தல் விடயங்கள்,மாணவர்களின் இன்றைய சிந்தனைகள், கல்வி முகாமைத்துவம்,பாடசாலைகளின் கற்றல்சூழல்,வகுப்பறைச்சூழல்,புதிய கல்விச் சீர்திருத்தத்தின் விடயதானங்கள்,மகிழ்ச்சியான கற்பித்தலில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்,மாணவர்களின் உளப்பாங்கு விருத்தி,கல்வியில் நாட்டமில்லாமற் போகும் மாணவர்களை உளவியல் தொழில் வழிகாட்டல் ஆலோசணையுடன் பாடசாலைக்கு அழைப்பதற்கான யுத்திகளை கையாளுதல்,ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே சரியான உறவைக் கட்டியெழுப்புதல் உட்பட பல விடயங்கள் ஆசிரியர்களுக்கு பல்லூடகத்தின் மூலமும்,குழுச்செயற்பாடு மூலமாகவும் இதன்போது தெளிவூட்டப்பட்டது.இச்செயலமர்வில்
கல்லூரியைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டார்கள்.