மாணவர்களின் போஷாக்கினை மேம்படுத்தல் நிகழ்ச்சிக்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி வலயத்திட்குட்பட்ட பாடசாலைகளுக்கான அரிசி பொதிகள் வழங்கும் நடவடிக்கைகைள் இன்று முன்னெடுக்கப்பட்டன

 


உலக உணவு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசாலை மட்டத்தில் முன்னெடுத்து வரும் மாணவர்களின் போஷாக்கினை மேம்படுத்தல் நிகழ்ச்சிக்கு அமைவாக கிழக்குமாகாணத்தில் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு உணவுக்கான உலர்வுணவு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

மாகாண பலநோக்கு கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட 306 பின்தங்கிய பாடசாலைகளின் 40,366 மாணவர்களுக்கான 56,250 கிலோகிராம் நிறையுடைய அரிசி பொதிகள் வழங்கும் நடவடிக்கைகைள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் முத்துலிங்கம் துதீஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திட்குட்பட்ட தெரிவு செய்யப்பட பாடசாலைகளுக்கான அரிசி பொதிகள் வழங்கும் நடவடிக்கைகைள் இன்று முன்னெடுக்கப்பட்டன