2022 ஆம் ஆண்டு கல்வி பொது சாதாரண தர பரீட்சை எழுத்தவுள்ள மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு , மண்முனை பற்று கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான விசேட பயிற்சி செயலமர்வு இன்று மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
சட்டத்தரணி தேவ சேனாதிபதி மற்றும் கொழும்பு அருள் கற்கை நிலையம் இணைந்த அனுசரணையில் நாடளாவிய ரீதியில் தமிழ் பிரதேச மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் இலவச பயிற்சி செயலமர்வுகளை நடாத்தி வருகின்றனர்.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் முன்னெடுத்துள்ள செயல்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலய கல்வி அலுவலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் ஒரு நாள் செயலமர்வாக இன்று மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்ற மாணவர்களுக்கான செயலமர்வு தொடர்பாக கருத்து தெரிவித்த வலயக்கல்விப் கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார்,





