நபர் ஒருவர், மனைவி உட்பட இரண்டு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 


 சிறுவர்களான பிள்ளைகள் இருவர் உட்பட கணவன், மனைவி என மொத்த குடும்பமும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹைதரபாத் நகரிலேயே இந்த அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவ வருவதாவது,

ஹைதராபாத்தை சேர்ந்தவர் நாகராஜூ. இவர் மனைவி சுஜாதா (36) தம்பதிக்கு சித்தபா (11), ரம்யாஸ்ரீ (7) என இரு பிள்ளைகள் இருந்தனர். சுஜாதா வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்துள்ளார். கணவரான நாகராஜூ உணவு பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார்.

 இந்த நிலையில் நேற்றுக் காலை நீண்டநேரமாகியும் அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்ததோடு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகமடைந்த அயலவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். 

அங்கு நாகராஜூ தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி மற்றும் குழந்தைகள் தரையிலும் சடலமாக கிடந்தனர்.விசாரணையில் மூவரையும் நாகராஜூ கத்தரிக்கோலால் குத்தி கொன்றுவிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தையல் வேலைக்காக சுஜாதா வைத்திருந்த கத்தரிக்கோல்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.