கமலனின் 'சொல்லப்படாத உண்மைகள்'(நாவல்) வெளியீடு.









வாழைச்சேனை பாரதி,சமூக கலை-இலக்கிய மேம்பாட்டுக்கழகமும் பொதுசன நூலகமும் இணைந்து கனடா தேசத்தில் வாழும் வாழைச்சேனை கமலன்(சிவநாதன்)எழுதிய 'சொல்லப்படாத உண்மைகள்'(UNTOLD TRUTHS) எனும் நாவல், வாழைச்சேன பொது நூலகத்தில் அறிமுகப்படுத்தி வெயிட்டு வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பொது நூலகர்,திருமதி.ஜெஸ்மின் ஹப்சா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளப்பற்றுப்பிரதேச சபையின் கௌரவ தவிசாளர்,திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் அவர்களுடன் இணைந்து நூலாசிரியரின் உறவினர் சார்பாக கிருசா முரளிதரன் தம்பதியினரும் இணைந்து நூலினை வெளிட்டுவைத்தனர்.

வரவேற்புரை நிகழ்த்திய பல்துறைப்படைப்பாளி எ.த. ஜெயரஞ்சித் அவர்கள் தனதுரையில் "ஏழு வருட உழைப்பில் வெளிவந்துள்ள இந்த சுயவரலாற்று நாவலை செவ்விதாக்கம் செய்த முறைமையினையும் அதற்கு தன் மாணாக்கர் பலரும் உதவியதாகவும்"  குறிப்பிட்டார்.

நூலாசிரியர் கமலன் எனும் சிவநாதன் பற்றிய வரலாற்றுக்குறிப்பை,இளம் கவிஞர் கி.ஜிதர்சினி அவர்கள் அறிமுகம்செய்துவைக்க, நூலின் அறிமுக நயவுரையை இளம் கலைஞரும் விமர்சகரும் சமூக வாண்மைவிருத்திச்செயற்பாட்டாளருமாகிய தமிழூராள் அனுஷ்டிகா அவர்கள் வழங்கிவைத்தார்.நூல் செவ்விதாக்கப் பதிப்புரையை இளங்கவிஞரும் ஆசிரியருமாகிய த.கி.ஷர்மிதன் அவர்கள் வழங்கிவைத்தார்.
 

பிரதம அதிதி தனதுரையில் "புத்தகங்களை அதிகம் வாசித்தவர்களே இந்தநிகழ்வை நடத்துகிறார்கள், பங்காளர்களாக இருக்கிறார்கள்.எனவே 'வாசிப்பு' மனிதரை படைப்பாளராக மட்டுமன்றி மிகுந்த ஆளுமையுடையராகவும் மாற்றிவிடும் கைங்கரியத்தைச் செய்துவிடுகிறது" என்றார்.

நூலாக்கச்செயற்பாட்டாளர்கள் நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கி சிப்பிக்கப்பட,ஏற்பு நன்றியுரையை ஆசிரிர். திருமதி கிருசா முரளிதன் அவர்கள் வழங்கிவைத்தார்.

வாழையூர் வாசகர் வட்டமும் பாரதி கலை இலக்கிய மேம்பாட்டுக்கழகமும் நிககழ்ச்சிகளை ஒருங்கிணைக்க கேணியூர் நந்நகோபால் பிரணிதா நிகழ்ச்சிகளை  தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் வாசகர்கள்,நூலாசிரியரின் உறவினர்கள்,ஆசிரியர்கள்,மாணாக்கர் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சென்னை எழினி பதிப்பகத்தால் அழகுற பதிப்பிக்கப்பட்ட இந்நூலின் இந்திய விலை 700ரூபாய் எனக்குறிப்பிடப்பட்டபோதும் நூற்பிரதிகள் இலவசமாகவே வழங்கிவைக்கப்பட்டன என்பதும் நூல்வெளியீட்டின் சிறப்பம்சமாகும்.