இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து இந்து ஆலயங்களில் விசேட கேதார கௌரி விரத பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன
16 செல்வங்களை தரக்கூடிய அம்பாளுக்கு அடியார்கள் 21 நாள் உபவாசம் இருந்து விரதம் அனுஜஸ்டித்து ஆலய பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
இன்றைய தினம் தீபாவளி பண்டிகை தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களின் 20 ஆம் நாள் கேதார கௌரி விரத பூஜை மிக சிறப்பாக சிறப்பிக்கப்பட்டன
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பழமை வாய்ந்த அம்மன் ஆலயமான மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 20 ஆம் நாள் கேதார கௌரி விரத அபிஷேக அலங்கார தீபாராதனை பூஜை வழிபாடு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குமார பிரபாகர குருக்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட 20 நாள் கேதார கௌரி விரத அபிஷேக அலங்கார தீபாராதனை பூஜை வழிபாட்டில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது





