காலி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

 


காலி, யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் பலியானதுடன் 4 வயது பிள்ளை உட்பட மற்றுமொருவர் காயமடைந்துள்ளனர்.

கறுவா பட்டை வாடிக்குள் வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் காலி, கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே, ரி-56 ரக துப்பாக்கியின் ஊடாக துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

மரணமடைந்த நபர், மனித படுகொலை வழக்கின் சந்தேகநபர் எனத் தெரிவித்த பொலிஸார், கருவலகல பிரதேத்தில் பெண்ணொருவரை திருமணம் முடித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது என்றனர்.